விளையாட்டு கழகம்

வந்த உறவுகள்

Blog Counter Widget

best counter

உரும்பிராய் உறவுகள்

விளம்பரங்கள்

urumpirai inaiyam உரும்பிராய் உறவுகளை அன்புடன் வரவேற்கின்றோம்

ஆடலரசனுக்கு இன்று ஆனி உத்திர உற்சவம்

வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதம் ஆனி மாதம். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ஆனி மாத  உத்திர உற்சவம் கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. 

இன்று உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 05.00 மணியளவில் ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு அபிசேகம் நடைபெற்று காலை 07.30 மணியளவில் நடராஜபெருமான், உமையம்மை சகிதம் உள்வீதி வெளிவீதி வலம் வந்தார் . வருடத்தில் இரு தடவை மட்டும் இங்கு நடராஜப்பெருமான் வலம் வருவார் என்பதும் கூறத்தக்கது.

இந்தத் திருமஞ்சன நிகழ்ச்சியில் சுமங்கலிகள் கலந்துகொண்டால், நீடூழி வாழுகின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

ஆடலரசனுக்கு இன்று ஆனி உத்திர உற்சவம்ஆடலரசனுக்கு இன்று ஆனி உத்திர உற்சவம்ஆடலரசனுக்கு இன்று ஆனி உத்திர உற்சவம்ஆடலரசனுக்கு இன்று ஆனி உத்திர உற்சவம்