விளையாட்டு கழகம்

வந்த உறவுகள்

Blog Counter Widget

best counter

உரும்பிராய் உறவுகள்

விளம்பரங்கள்

urumpirai inaiyam உரும்பிராய் உறவுகளை அன்புடன் வரவேற்கின்றோம்

இன்று ஐந்து கரத்தவனுக்கு திருமஞ்சம்

இறைவனின் மஞ்சத்தை பலவிதமாக அழைப்பார்கள். ரதம் போலவும், சப்பறம் போலவும் இரண்டும் கலந்த தோற்றத்தில் முத்துக்களினாலும், புஷ்பத்தினாலும் அமைப்பர். சிறந்த கைவண்ணத்தில் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரவேலைப்பாடுகளினாலும், இதனை ரதம்போல சிற்பம், ஓவியம் வர்ண வேலைகள் கொண்டதாகவும் அமைப்பர். இவற்றை முறையே சப்ரகூட மஞ்சம், புஷ்பமஞ்சம், சித்திர மஞ்சம் என வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுவர். பொதுவாக நாம் அமைக்கும் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் போன்ற சிறந்த ஒரு மஞ்சகூடத்தில் இறைவனை அமர்த்தி வழிபடுவதன்மூலம், இல்வாழ்க்கையில் அனைத்து சுகபோகங்களும், குடும்ப சந்தோஷங்களும் கிடைப்பதுடன், பின்னர் மோட்சம் எனப்படும் வீடுபேறம் விநாயகப்பெருமானின் அருளால் கிடைக்க வேண்டும் என்று இவ்விழா எடுக்கப்படுகின்றது. 

இன்று சரியாக 07.00மணியளவில் ஆரம்பமாகிய வசந்த மண்டப பூசையை தொடர்ந்து 08.15மணியளவில் விநாயகப் பெருமான் திருமஞ்சம் ஏறினர் இதன்  போதுஅடியவர்கள் அரோகரா அரோகரா என்று இடைவிடாது சொல்லிய வண்ணம் இருந்தனர்...

 கற்பக விநாயகர் ஆலய திருமஞ்ச காட்சி


 மேலும் படங்களை பார்வையிடுவதற்கு