எம்மை பற்றி .
- Details
- Written by Admin
- Hits: 1685
முதலில் என்னை பற்றி .........
வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் கவனிப்புகளே பிரதானம். பயணத்தின் நீளங்களையோ, அகலங்களையோ, ஆழங்களையோ, உயரங்களையோ நிர்ணயம் செய்து விடமுடியாத சாலை நமக்கு முன்னால் நீண்டு கிடக்கிறது.
இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம்.
இந்தத் தளத்தில் நீங்கள் கம்பனின் கவிதைக் கூறுகளையோ, சேக்ஸ்பியரின் ரசனைக் கூறுகளையோ சந்திக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் நினைக்கும் சிலவற்றைச் சொல்லியிருப்பேன். காரணம் நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.
இணையம் பற்றி ....
உரும்பிராய் இணையமானது உங்களை அன்புடன் வரவேற்கிறது .
ஊரில் பெரும்பான்மையானோர் புலம் பெயர்ந்து பாரெங்கும் பரந்து வாழும் இக் காலகட்டத்தில் ஊரிலும், ஊர் ஆலயங்களிலும் அன்றாடம் நிகழ்வுறும் நிகழ்வுகளையும், விழாக்களையும் உடனுக்குடன் அறியவும், பார்க்கவும் ஆவலுடன் இருக்கும் அனைவருக்கும் இவ் இணையம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஊரின் மத்தியில் பழுத்த நற்பழ விருட்சமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் அமைந்து; சமய, சமூக, கலாச்சார, பண்பாட்டை வளர்க்கும் நற்சிந்தனைகளையும், அறிவுரைகளையும் வெளிப்படுத்தும் இணையமாக இது நிச்சயமாக அமையும் ..
“ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது பழைய பழமொழியாகிவிட, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலகட்டத்தில் “இணையம் இல்லா ஊருக்கு அறிவு-அழகு பாழ்” எனும் புதுமொழியாக இணையத்தின் தேவை சிறப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். ஆறு ஊரைச் செழிப்படையச் செய்வதுபோல், இணையம் அங்கு வாழ்வோரின் அறிவைச் செழிப்படையச் செய்கின்றது. ஊர் இணையங்கள் யாவும் அவ்வூருக்கு பெருமை சேர்க்கும் அறிவுப் பொக்கிசங்கள்.
“மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாரும் அங்கில்லை – அதுபோல்
இணையம் என்னும் நற்பழ விருட்சத்தில்
அறிவுப்பசிக்கு விருந்தாக நற்கனிகள் பதியப்பெற்றால்
ஊராரும், உலகத்தாரும் மொய்த்திடுவர் வௌவால்கள் போலங்கு”
இவை நாம் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.
"என்றும் அன்புடன் உங்கள் இணைய நண்பன் கங்காஸ்ரீ "

என்னுடன் நீங்கள் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வதற்கு ....
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
urumpirai inaiyam_ www.eurumpirai.com









